ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை

Jeyalalitha CM tamil nadu

சென்னை:ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை ஜாமினில் வெளியே கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆந்திர மாநில சிறையில் தமிழர்கள் வாடுவதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்த விபரங்களை பெறும்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார். அதன்படி ஆந்திர சிறையில் உள்ள 516 தமிழர்களின் விவரம் பெறப்பட்டதுஅவர்களை ஜாமினில் விடுவிக்கவும் அவர்களின் வழக்கை நடத்த இலவச சட்ட உதவி வழங்கும்படியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் ஜெயலலிதா அக்.,15ல் கடிதம் எழுதினார்.

இதையடுத்து ஆந்திர சிறையில் இருந்து 172 தமிழர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்; 344 பேர் சிறையில் உள்ளனர்.அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து இலவச சட்ட உதவி கோரும் மனுக்கள் கலெக்டர்கள் மூலம் பெறப்பட்டன. அதில் 312 மனுக்கள் அக்., 29ல் தமிழ்நாடு மாநில சட்ட உதவி ஆணையம் மூலம், ஆந்திர மாநில சட்ட உதவி ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக ஆந்திர சிறையில் உள்ளவர்களை ஜாமினில் வெளியே கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி இரண்டு அரசு வழக்கறிஞர்கள் தலைமையில், வழக்கறிஞர் குழு ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான செலவிற்கு முன்பணமாக எட்டு லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

Views:
282
Article Categories:
India · News

Comments are closed.