இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தனிப்பட்ட முறையில் ஆதரவு – நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது: – விஷால்

Actor Vishal

நடிகர் விஷால் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’காவிரி பிரச்சினையில் நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது என்று தெரிவித்தேன். அதற்காக என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரங்களில் அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் எனது தனிப்பட்ட முறையில் ஆதரவு உண்டு. ஆனால், நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படாது. மேலும், வரும் சட்டசபை தேர்தலில் அரசியலில் நுழையும் எண்ணம் துளியுமில்லை’’ என்று விஷால் தெரிவித்தார்.

Views:
215
Article Categories:
Cinema

Comments are closed.