இவ்வளவு கிட்ட விமானம் தரையிறங்கி பார்த்திருக்கீங்க! – அள்ளுகிளப்பும் வீடியோ

airways_british_eelakkural

இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட 2 நாட்களில் 2 மில்லியன் வியூஸ் அள்ளியிருக்கிறது

பலரும் இப்படிப்பட்ட விமான நிலையத்தின் இயங்கு தன்மையைப் பார்த்து அதிர்ச்சியுடன் கமென்ட்ஸ் இட்டு வருகின்றனர். 

கிரீஸ் நாட்டில் உள்ள கியாதோஸ் விமான நிலையத்தில், மக்கள் நிற்கும் இடத்திலிருந்து சில அடிகளுக்கு மேல் விமானங்கள் தரையிறங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கடற்கரையோரம் இந்த விமான நிலையம் இருப்பதால், மக்கள் பலர் தரையிறங்கும் இடத்துக்குப் பக்கத்திலேயே உள்ளனர். 

இந்த கியாதோஸ் விமான நிலையத்தை ‘ஐரோப்பாவின் மார்டென்’ என்று அழைப்பாளர்கள். விமானம், மக்களுக்கு அருகில் தரையிறங்குவதால் இந்தப் பெயர். இப்படி நெருக்கமான தரையிறங்கல் காரணமாகவே, சுற்றுலா பயணிகள் பலர், விமான நிலையத்துக்குப் பக்கத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயல்வார்கள்.

இது குறித்து யூ-டியூபில் வீடியோ பகிர்ந்துள்ள பிரபல ‘கார்கோஸ்போட்டர்’ சேனல், “கிரீக் தீவில் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாறியுள்ளது கியாதோஸ் விமான நிலையம். கடந்த வாரம் இந்த விமான நிலையத்துக்குச் சென்று, ஃப்லைட் தரையிறங்குவதை படம் எடுத்தோம்” என்று பதிவிட்டுள்ளது. 

இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட 2 நாட்களில் 2 மில்லியன் வியூஸ் அள்ளியிருக்கிறது. பலரும் இப்படிப்பட்ட விமான நிலையத்தின் இயங்கு தன்மையைப் பார்த்து அதிர்ச்சியுடன் கமென்ட்ஸ் இட்டு வருகின்றனர்.

Views:
150
Article Categories:
News · World

Comments are closed.