உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்யட்டாம் – நடிகை திரிஷா

Trisha Instagram

பாரிஸ் குண்டுவெடிப்புக்கு பிறகு திரிஷா தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
பாரிஸ் மட்டுமல்ல உடைந்த்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்ய வேண்டுமாம். தவறில்லை,
அனால் திரிஷா அவர்களே இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டபோது எங்கே
இருந்தீர்கள்? ஷூட்டிங் பிசியா?? ஏன் உங்கள் படத்தை அதிகம் பார்க்கும் மக்களின் சகோதரர்கள் அவர்கள், ஒவ்வொரு உயிரும் மதிக்கப்படவேண்டியதுதான் அனால்  தமிழன் உயிர் மட்டும் என்ன மயிரா?? தமிழர்கள் செத்து விழும்போது இந்த இரங்கல் செய்தி எல்லாம்
வெளியில் வராதோ?? வெளி நாடுகளின் அவலம் என்றால் முன்னுக்கு வந்து எல்லா நடிகர் நடிகைகளும் அறிக்கை, இரங்கல்  என்று அள்ளி விடுறீங்க. ஏன் 2009 இல் உங்களிடம் facebook  இல்லையோ அல்லது twitter இல்லையோ? மானமுள்ள எந்தவொரு தமிழனும் உங்களது இந்த இரங்கல் செய்தியை கேட்டால் என்னைபோலவே கேள்விகள் கேற்பான். உங்களுக்கு துணிவிருந்தால் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

சொந்த நாட்டில் மழைவெள்ளம் பெருகி மக்கள் படும் அவஸ்தைகள் அதிகம் அதற்குகூட  ஒரு சிறு உதவி செய்ய முடியாத உங்களை எல்லாம் மக்கள் தூக்கி தலையில் வைத்து கொண்டாடுவார்கள். நாய்க்குட்டிக்கு அடிபட்டா நாலு ஊருக்கு கேற்கும் உங்கள் அலறல். அனால்
தமிழர்கள் கொல்லப்பட்டால் உங்கள் காது செவிடாகி கண்கள் குருடாகி ஊமையாய் இருப்பீர்கள். நீங்கள் வெறும் நடிகர்கள் என்பதை காட்டுவதுபோல்.

மானமுள்ள தமிழர்களே இப்பயாவது திருந்துங்கள்!. தமிழனுக்கு ஆதரவாக இல்லாத யாரையும் தூக்கி தலையில் வைக்காதீர்கள். அது நடிகரோ, நடிகையோ அல்லது அரசியல் தலைவர்களோ எவராயினும் தூக்கி எறியுங்கள்.

 

Instagram trisha: https://instagram.com/dudette583/

–வன்னிநிலா–

Views:
301
Article Categories:
Cinema · India · News · Sri Lanka · World

Comments are closed.