எழுத்துக்கு மரியாதை கொடுத்த – கமல்!

Kamal Actor

டிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆன தொடர்பு அறிந்ததே. எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது எழுத்தாளர்களுக்கு பரிசளித்து, அவர்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த வருடம் தனது 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கி அவரை கௌரவித்தார். இந்த சந்திப்பின் போது ‘தூங்காவனம்’ திரைப்படத்தின் வசனகர்த்தா சுகா உடன் இருந்தார்.

Views:
255
Article Categories:
Cinema

Comments are closed.