எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்!

ஒருநாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் இன்று தொடங்கியது. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படங்களை இயக்கிய பொட்டென்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்நிலையில் இது குறித்து படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கடந்த 12 மாதங்கள் மிகவும் கஷ்டபட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது சிறப்பான படத்தை அளிக்க உள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Views:
325
Article Categories:
Cinema

Comments are closed.