கடைசிநேரத்தில் சத்யராஜ் படப்பெயர் மாறியது எதனால்?

Sathyaraj New Movies

தென்னிந்தியாவின் சிறந்த படத்தொகுப்பாளர்களில் ஒருவர் ஆண்டனி. தமிழின் முன்னணி இயக்குநர்களான முருகதாஸ், ஷங்கர், கெளதம் மேனன், விஜய், லிங்குசாமி உள்ளிட்டவர்களின் படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர். இப்போது இயக்குநராக அவதாரமெடுத்திருக்கிறார்.

மலையாளத்தில் ஜாய் மேத்தியூவின் இயக்கத்தில் லால், ஸ்ரீநிவாசன் நடிப்பில் வெளியாகி பாராட்டப்பட்ட படமான “ஷட்டர்” படத்தின் ரீமேக்கே “நைட் ஷோ”. இப்படத்திற்கு திரைக்கதை, இயக்கம் மற்றும் எடிட்டிங் பணிகளை ஆண்டனியே செய்திருக்கிறார். சத்யராஜ், வருண், அனுமோல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஷூட்டிங், டப்பிங் பணிகள் முடிவடைந்து படம் வெளியாக தயாராகியிருக்கிறது.

படம் வெளியாக இரண்டுவாரங்களே இருக்கும் நிலையில், இப்படத்தின் பெயரை மாற்ற படக்குழு தீர்மானித்து, “ஒரு நாள் இரவில்” என்று மாற்றியிருக்கிறது. படத்தின் பெயரை மாற்றியமைக்குக் காரணம் என்னவென்று பார்த்தால், இப்படத்தைப் பார்த்த சில பிரபலங்கள் படத்தின் தலைப்பை இன்னும் அழுத்தமாக வைத்தால் நன்றாகயிருக்கும் என்று கூறினார்களாம். மேலும் வரிச்சலுகை பெறுவதற்கும் தமிழில் டைட்டில் வைத்தால் நன்றாகயிருக்கும் என்பதால் படத்தலைப்பை மாற்றியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

Views:
216
Article Categories:
Cinema

Comments are closed.