கண்மூடித் தூங்கும் எந்தன் தோழா – பாடல்

Maaveerar Naal 2015

கண்மூடித் தூங்கும் எந்தன் தோழா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா
கண்மூடித் தூங்கும் எந்தன் தோழா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா

காலாற நடந்து செல்வோம் தெருவில்
தோளோடு இல்லை எந்தன் அருகில்..நீ
தோளோடு இல்லை எந்தன் அருகில்
அரும்பு மீசை சிரிப்பை காண
எந்தன் விழிகள் தேடுது..
விரும்பி நீயும் போட்ட குப்பி
எந்தன் கழுத்தில் ஆடுது..

கண்மூடித் தூங்கும் எந்தன் தோழா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா

காய்ச்சல் வந்த போதிலுமே
பக்கம் இருப்பாய் நான்
களத்தில் நின்ற போதிலுமே
பக்கம் இருப்பாய்    —   (2)

போர் வெடியின் ஓசையிலே
பொழுது புலர்ந்திடும் உந்தன்
புன்னகையைப் பார்த்துத் தானே
கண்கள் விடியும் தோழா
கண்கள் விடியும்….
அரும்பு மீசை சிரிப்பை காண
எந்தன் விழிகள் தேடுது..
விரும்பி நீயும் போட்ட குப்பி
எந்தன் கழுத்தில் ஆடுது..

காயப்பட்ட வேளையிலும் நீ
கத்தவில்லையே உந்தன்
கண்கள் மட்டும் என்னை
விட்டு அகலவில்லையே — (2)
குருதியோடு சேர்ந்தது உந்தன்
உயிரும் வழிந்தது என்னைப்
பிடித்திருந்த உந்தன் கையும்
மெல்லச் சரிந்தது தோழா
மெல்லச் சரிந்தது…
அரும்பு மீசை சிரிப்பை காண
எந்தன் விழிகள் தேடுது..
விரும்பி நீயும் போட்ட குப்பி
எந்தன் கழுத்தில் ஆடுது..

கல்லறையில் விதைக்கும்போது
கண்ணீர்ப் பயணம் உந்தன்
விடைபெறுதல் கண்டபோது
பகையில் கோபம் — (2)
வல்ல புலி என்று உன்னைக்
காலம் போற்றும்..
எந்தன் வாழ்நாளும் உந்தன்
கனவைச் சேர்ந்தே ஏற்கும்
தோழா கனவை ஏற்கும்

கண்மூடித் தூங்கும் எந்தன் தோழா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா

Views:
982
Article Tags:
Article Categories:
Eelam Songs

Comments are closed.