கனடாவில் 8 மில்லியன் டொலரை சுருட்டிய தமிழ்த் தம்பதி கைது!

Canada Tamil Family Arrested

கனடா- டொரான்டோ பகுதியில் 8 மில்லியன் கனேடிய டொலரை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தம்பதியினரை கனடிய பொலிஸார் கைது செய்துள்ளனர். 30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்த விசாரணைகளின் மூலம் போலி காசோலைகளை பயன்படுத்தி இவர்கள் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், போலியான சான்றளிக்கப்பட்ட காசோலைகளை பயன்படுத்தி விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Canada Tamil Family Arrested

Views:
304
Article Categories:
News · World

Comments are closed.