கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் மீண்டும் அமைதி ஏற்பட்டுள்ளது. – குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை மாறி அங்கு அமைதி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.கிறிஸ்மஸ் தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் முகாமிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமாளன சூழ்நிலை உருவானது. இதனால் முற்கூட்டிய பாதுகாப்பு நோக்கம் கருதி அப்பகுதியில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பஸீல் செகெனி என்ற நபர் கடந்த வாரம் நோர்த் வெஸ்ட் பொயின்ட் முகாமிலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பற்றைக் காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.2010ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்த செகனி, 2013 ஆம் ஆண்டு அகதியெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தார். இவர் மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள கேர்ட்டின் முகாமில் நீண்டநாட்களாக இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்திற்குப் பின் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் செகனி பாரதூரமான உளநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர் என கூறப்பட்டுள்ளது.

Views:
218
Article Categories:
News · World

Comments are closed.