Breaking News
Home / News / India / கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி!
kerala floods rat

கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி!

கேரளாவில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் தற்போது அங்கு எலி காய்ச்சல் பரவி வருகிறது. 

கடந்த மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கேரள மக்கள் தங்கள் உடமைகளை இழந்து அவதிபட்டு வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் நிவாரணப் பொருட்களை வழங்கி அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப உதவிகள் செய்து வருகின்றன.

மழைவெள்ளம் ஏற்படுத்திய சுகாதார சீர்கேட்டால் கேரளாவில்  தொற்று நோய்கள் பரவும் அபாயமும் நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு எலி காய்ச்சல் பரவி வருகிறது.  இந்த காய்ச்சலால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கேரள சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது. இதனால், சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

112total visits,2visits today

About admin

Check Also

ராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை!

இராவணன் பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், ...

content protection plugin by http://jaspreetchahal.org