கொடிய விஷப்பாம்மை கடித்துக் கொலை செய்த குழந்தை: அதிர்ச்சி சம்பவம் – வீடியோ!

Snake Murdered by a Baby

பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தை விஷப்பாம்பை கடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் உள்ள மாஸ்டர்தாஸ் எனும் நகரைச் சேர்ந்த ஜெயின் பெரேறிய, லூசியர் டிசோஸா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ, வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

குழந்தைக்கு பால் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற தாயாருக்கு தனது குழந்தையிடம் இருந்து சத்தம் எதுவும் வராததல் சந்தேகமடைந்து வெளியில் வந்து பார்த்துள்ளார்.

அப்போது குழந்தையின் கையில் ரத்த இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார், மேலும் அவனுக்கு அருகில் ஜராராக்கா வகையை சேர்ந்த விஷப்பாம்பு ஒன்று இறந்து கிடந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாயார், உடனடியாக பாம்பினை ஒரு பாட்டிலில் போட்டு எடுத்துக்கொண்டு மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உங்களது மகன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதை தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தை, அந்த பாம்பை விளையாட்டுப் பொருளாகவோ, பொம்மையாகவோ எண்ணி கடித்திருக்கக் கூடும் என்றும், குழந்தை கடித்தது பாம்பின் கழுத்துப் பகுதி என்பதால், பாம்பு குழந்தையின் பிடியிலிருந்து விலகமுடியாமல் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் தெரிவித்தனர்.

குழந்தை கடித்து கொன்ற பாம்பு பிரேசில், அர்ஜென்டீனா மற்றும் பராகுவே உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்ற ஜராரக்கா எனும் கொடிய விஷப் பாம்பாகும்.

Views:
246
Article Categories:
News · World

Comments are closed.