Breaking News
Home / Cinema / சினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும் – ஆதவப்பிரியன்
milk shower for rajini

சினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும் – ஆதவப்பிரியன்

திரைப்படங்களால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளே முதல் இடத்தை பெறுகின்றது. நடிகர்களுக்காக உயிர்விடுவதும் அவர்களின் பின்னால் சென்று நேரத்தை வீணடிப்பதும் நாளாந்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு வேலையை தங்கள் விருப்பபடி செய்வதற்காக கொடுக்கப்படும் அங்கிகாரம் உயர்ந்த இடத்தில் இருப்பது சினிமாவில் மட்டுமே.

ஒரு நடிகர் அல்லது நடிகை தனது வேலையாக கருதி திரைப்படங்களில் அவரவர் விருப்பம் போல் நடிக்கின்றனர் அதற்கு சம்பளமும் பெறுகின்றனர், தவறில்லை ஆயினும் மக்களாகிய நாங்கள் என்ன செய்கின்றோம்? ஒரு நடிகர் அல்லது நடிகையின் நடிப்பு பிடித்துவிட்டால் அவர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதும் அவர்களின் பதாகைகளுக்கு  பால் ஊத்துவதும் வேடிக்கை மட்டுமல்ல வேதனைக்கும் உரியதாகும். அதில் ஒரு விடயம் கவனத்தில் கொள்ளவேண்டும், ஒரு திரைப்படத்தில் பால் விலை, அரிசி விலை அதிகமாக உள்ளது என்று நாயகன் பேசும் வசனங்கள் பல, அதே திரைப்படத்தின் நாயகனுக்கு பாலபிஷேகம் நடக்கும் ரசிகர்களால் என்னவொரு அறிவு பாருங்கள். சில நடிகர்கள் பாலபிஷேகம் செய்யவேண்டாம் என்று வெறும் வார்த்தைக்கு கூறுவார். ஏன் அவர்களே நேரடியாக சென்று அதை தடுக்கவேண்டியதுதானே? அல்லது பாலபிஷேகம் செய்யும் ரசிகர்களை ரசிகர் மன்றத்தில் இருந்து வெளியேற்றலாமே! இது இரண்டுமே நடக்காது நடந்ததும் இல்லை.

அரிகாரம் பூசி அடுக்கடுக்காய் வசனம் பேசி ஆயிரம் நன்மைகள் செய்வதுபோல் திரையில் மட்டுமே வந்துபோகும் இந்த கேடு கேட்ட நாயகர்களுக்கு, அவர்  பின்னால் சென்று தமது எதிர்காலத்தை வீணாக்கி நாசமாய் போகும் முட்டாள் கூட்டமே  பலம். இந்த கொடுமை இந்திய சினிமாவில்தான் அதிகம் நடக்கும். தாய் தந்தைக்கு கூட இல்லாத முக்கியத்துவம் தனது தல, தளபதி, சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார்  போன்ற சுயநல நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த ரசிகர் கூட்டம் எப்போது திருந்தும்?. வெளிநாடுகளில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அனால் இந்தியாவில் அது ஒரு அரசியல் அத்தோடு நில்லாமல் முட்டாள்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலை.

தனக்கென ஒரு நாடு இல்லாத இனம் தனக்கென பல தலைவர்களை கொண்டு சினிமா மோகத்தில் விழுந்து இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த கேடு கெட்ட வேலையை எப்போது நிறுத்தும். நாட்டுப் பற்றுகொண்ட பல தமிழர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் அவர்கள் ஒவ்வொருத்தரின் மனதில் கேள்வி மாலையாக இருக்கும் சிறு பிரிவே இக்கட்டுரை.

இனத்தின் விடுதலைக்காக போரிட்ட ஈழத்தமிழரின் கரம் பலபடுத்த முனையாத கூட்டம் இந்தச் சினிமாவின் பின்னால் சென்றுகொண்டே இருக்கும். சினிமா என்பது சமுக அக்கறை கொண்டதாக இருக்கவேண்டும் ஆனால்  சமூக சீர்கேடுகளை விளைவிக்கும் ஒரு சாதனமாக இருக்க கூடாது. இந்த கோட்பாடு எப்பவோ இந்தியச் சினிமாவில் தொலைந்துவிட்டது இன்னும் தொடர்ந்து அசிங்கமான திரைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது. ஆனாலும் எமது மக்கள் அதைப்பற்றியெல்லாம் சிந்திக்காது தொடர்ந்தும் தென்னிந்திய சினிமாவில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

எமது ஈழக் கலைஞர்கள் பலர் மிகத் திறமையாக கருத்துள்ள குறும்படங்கள், பாடல்கள் முழு நீள திரைப்படங்கள் வெளியிட்டால் அதை எட்டிப் பார்ப்பதே இல்லை. ஏன் எமக்கான தொலைக்காட்சிகள் என்று சொல்லிக்கொண்டு வரும் பலர் ஒரு சில கலைஞர்களின் படைப்பையே வெளியில் கொண்டு வருவதும் வேதனைக்குரியது. கனடா, பிரான்சு,லண்டன்,நோர்வே,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,வவுனியா என்று பல இடங்களில் இருந்து எமது கலைஞர்கள் வெளியிடும் படைப்புக்கள் புறக்கணிக்கப் படுவதும் அதற்கு பதில் தென் இந்தியச் சினிமா பாடல்கள், திரைப்படங்கள் ஒளிபரப்புவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

“சினிமா உன்னை சீரழிக்கக் கூடாது..
மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும்”

மாற்றம் வேண்டி உங்களில் ஒருவன்…
–ஆதவப்பிரியன்–

About admin

Check Also

Jaffna arrest 2018

யாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது! – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

content protection plugin by http://jaspreetchahal.org