ஜேர்மனியில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பது எப்படி?

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3,059. அவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இது ஆயிரத்தில் இரண்டு பேருக்கும் குறைவு. இந்த எண்ணிக்கை சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின் அல்லது பிரான்சை ஒப்பிடும்போது மிகக்குறைவாகும்.

சீனாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 1000 பேருக்கு 39 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இத்தாலியில் 71 பேர், ஈரானில் 45 ஸ்பெயினில் 28. ஜேர்மனியில் மட்டும் எப்படி இந்த எண்ணிக்கை இவ்வளவு குறைவாக உள்ளது? பெர்லினிலுள்ள ராபர்ட் கோச் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான பேராசிரியர் Dr. Lothar H. Wieler கூறும்போது, ஆரம்பத்திலிருந்தே தாங்கள் முறையாக மக்களை சோதிக்கும்படி தங்கள் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், இது ஒரு ஆரம்பம்தான் என்று கூறியுள்ள அவர், மற்ற நாடுகளைப்போலவே ஜேர்மனியிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, எப்படி ஒவ்வொரு நாட்டிலும் நோய் உருவானது என்பது போன்ற தகவல்களை, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுடன் பரிமாற்றம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Views:
71
Article Categories:
News · World

Comments are closed.