துப்பாக்கிச் சூடு நடத்துவோம் – 19 ஆவது நாளாகப் போராடும் மக்களுக்கு புதிய எச்சரிக்கை

srilanka army warnings

தமது காணிகளை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக, இன்றுடன் 19 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் பிலக்குடியிருப்பு மக்களுக்கு, புதிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு படையினர் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். நேற்று கேப்பாபுலவு பகுதியில் உள்ள காணியில் புதிதாக போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இது விமானப் படை காணியாகும், தேவையில்லாமல் உட்செல்லல் தடை , தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் அந்த பகுதியில் இந்த அறிவித்தல் பலகை நேற்று போடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

எனினும், இன்று 19 ஆவது நாளாக இந்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

srilanka army warnings

Views:
212
Article Tags:
·
Article Categories:
News · Sri Lanka

Comments are closed.