திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை ஆதரித்து, சரத்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அபோது கடந்த மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசி வருகிறது. எனவே, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது அதிமுகதான் என்பது உறுதியாகி விட்டது. அதிமுக அரசின் சாதனைகளை தொண்டர்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறும் போது அங்குள்ள ஒரு டீக்கடையில் நின்றிருந்த ஒரு நபர் சரத்குமாரை பார்த்து தரக்குறைவாக விமர்சனம் செய்து சத்தமாக கமெண்ட் அடித்தார்.
வேன் சிறிது தூரம் கடந்து சென்றபோதிலும், அதை நிறுத்திய சரத்குமார், வேனை விட்டு இறங்கி அந்த டீக்கடைக்கு திரும்பிச் சென்றார்.சரத்குமார் டீக்கடை நோக்கி போனதை பார்த்த தொண்டர்கள் பரபரப்படைந்தனர். டீக்கடையில் கமெண்ட் அடித்த நபரிடம் சென்ற சரத்குமார், நீங்க எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால் மரியாதையுடன் பேசுங்கள். நான் ஒரு ஆள் 10 பேரை சமாளிப்பேன். தேர்தல் நேரம் என்பதால் அமைதியாக இருக்கிறேன் என கோபமாக பேசினார். அப்போது நத்தம் விஸ்வநாதனும், வேனை விட்டு இறங்கி, வந்து சரத்குமாரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.
1456total visits,3visits today