நடு வீதியில் ஓட ஓட மனைவியை விரட்டி சுட்டுக்கொன்ற பிரேசில் பொலிஸ் அதிகாரி!

பிரேசில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நடு வீதியில் ஓட ஓட விரட்டி 11 தடவைகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சீசீரீவி (CCTV )வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அதிர்சிகரமான சம்பவம் தென்கிழக்கு பிரேசிலின் உபேர்லான்டியா வீதியில் ஒக்டோபர் 20 ஆம் திகதி முற்பகல் 10. 50 அளவில் நடைபெற்றுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தின் சீசீரீவி வீடியோவே இப்போது பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.

46 வயதான பொலிஸ் அதிகாரிக்கும் அவரது மனைவியான 36 வயதுடைய Veridiana Rodrigues Carneiro இற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் மனைவியை துரத்திச் சென்ற கணவன் 11 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மனைவியை கொலைசெய்த பொலிஸ் அதிகாரியை பிரேசிலிய பொலிசார் கைது செய்து மனநல மருத்துவமனையில் உளவியல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்தச் பயங்கரமான சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கையில்; கணவன் மனைவி இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் மனைவியை விரட்டிச் சென்ற கணவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறியுள்ளனர்.

Views:
268
Article Categories:
News · World

Comments are closed.