நாட்டை மீட்க நாளை மெரீனா போர், நடு நடுங்கும் அரசு? : மாணவன்டா..!

மீண்டும் மாணவர்கள் அணி திரள்கிறார்கள். மாட்டுக்காக போராடிய மாணவச் செல்வங்கள் இப்போது நாட்டுக்காக திரள்கிறார்கள்.
இம்முறை உயிர் தியாகமும் செய்வோம் என்று பகீர் கிளப்புகிறார்கள். மன்னார்குடி ஆட்சி நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஆபத்து.
நாட்டை கூறு போட்டு விற்று விடுவார்கள். அராஜகம் தலை விரித்து ஆடும். எனவே, அந்த ஆட்சியை அகற்ற ஒன்று கூடுகிறோம் என்கிறார்கள்.

இந்தக் காரணங்களால் நாளை மாணவர்கள் கூடுகிறார்கள். இந்த அறிவிப்பால் அரசு நடுங்குகிறது. அவர்களுக்கு ஆட்சியை தக்க வைப்பதே பெரும் பாடாக இருக்கிறது.
இந்த நேரத்தில் மாணவர்களும் வீதிக்கு வந்தால் எப்படி அடக்குவது? போலீஸ் கூட தங்கள் பேச்சைக் கேட்காதே என்ற அச்சத்தில் கிடக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
அந்தப் பயம் வேண்டும் என்கிறார்கள் மக்கள்.
Views:
251
Article Categories:
India · News

Comments are closed.