பரவும் கபாலி படங்கள் – கடுப்பில் படக்குழு

Kabali Rajini

‘கபாலி’ முதற்கட்ட படபிடிப்புகள் சென்னையில் நடத்தி முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில நாட்களாக மலேசியாவில் நடந்து வருகிறது. கபாலி படக்குழுவினர் அந்த நாட்டில் விறுவிறுப்பாக படபிடிப்பு நடத்திவருகின்றனர். சில நாட்களாக ‘கபாலி’ படக்காட்சிகள் இணையதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த், விதவிதமான தோற்றங்களில் வரும் படங்களை திருட்டுத்தனமாக செல்போனில் படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் ஆவேசமாக வில்லன்களிடம் பேசும் காட்சிகள், ஓட்டலில் சாப்பிடுவது, காரில் வந்து இறங்குவது போன்ற காட்சிகள் இணைய தளங்களில் பரவி உள்ளன. இதன் மூலம் ரகசியமாக இருந்த ‘கபாலி’ ரஜினி-யின் முழு தோற்றமும் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. துணை நடிகர், நடிகைகள் ரஜினியை செல்போன்களில் படம் எடுத்து இணைய தளங்களில் பரப்புவதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் செல்போன்களை படப்பிடிப்பு அரங்குக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Views:
223
Article Tags:
Article Categories:
Cinema

Comments are closed.