பாடகி வாழ்க்கையிலும் விளையாடிய தனுஷ்: பிரியும் மீண்டுமொரு ஜோடி…

dhanush suchitra hot

தனுஷ் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ள பாடகி சுசித்ரா தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்வதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ், சிம்பு, பாடகி சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் பரபரப்பு புகார் தெரிவித்தார். தான் தாக்கப்பட்டதால் கையில் காயம் ஏற்பட்டதாகவும் ஆதாரத்துடன் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

தானும், கணவர் கார்த்திக்கும் விவாகரத்து செய்வதாக சுசித்ரா ட்விட்டரில் அறிவித்துள்ளார். இது அதிகாரப்பூர்வமானது என்று வேறு தெரிவித்துள்ளார்.

தனுஷ், நான் விவாகரத்து கோருவது குறித்து உங்கள் ஆட்களை என்னை கிண்டல் செய்யச் சொல்ல வேண்டியது தானே. அவர்கள் எல்லாம் முட்டாள். எனக்கு போர் அடிக்கிறது என ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுசி.

பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் தனது திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைக்காததால் சினிமா உலகை விட்டு வெளியேறுவதாக கார்த்திக் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே அமலாபால், விஜய் ஜோடி பிரிவிற்கு தனுஷ் தான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது சுசித்ராவின் வாழ்க்கையில் தனுஷ் விளையாடியதால் தான் இப்படியொரு விவாகரத்து சம்பவம் நடக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views:
246
Article Categories:
Cinema

Comments are closed.