பாரிசிஸ் தாக்குதலின் முக்கியசூத்திரதாரி சுட்டுக்கொலை!

தாக்குதலின் முக்கியசூத்திரதாரி என கருதப்படும் அப்தெல்ஹமீட் அபாவுட் புதன்கிழமை செயின்டனிஸ் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கையின்போது கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கசனுவே தெரிவித்துள்ளார். பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடியில் தாக்குதலுக்கு உள்ளான கட்டட இடிபாடுகளுக்குள் குண்டுதுளைக்கப்பட்ட அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தை சேர்ந்த 27 வயது நபரை அவரது கைவிரல் அடையாளங்களை வைத்து இனங்கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீரீசின் ஊடாகவே அவர் பிரான்ஸுக்குள் வந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பெர்னார்ட் கசனுவே தெரிவித்தார்.இந்த சம்பவத்தில் யுவதி ஒருவர் தனது தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் அப்டெல் ஹமித்தின் நெருங்கிய உறவினர் என்று அறியப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர் அப்டெல் ஹமித்தாக இருக்கலாம் என்று பிரான்ஸ் அதிகாரி ஒருவர் முன்னர் தெரிவித்திருந்தபோதிலும் அவரின் உடல் பொலிசாரின் சரமாரியான துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அடையாளம் காண முடியாத அளவுக்கு சின்னாபின்னமாகி இருந்ததால் , அவரது கை விரல் அடையாளங்களை வைத்து அவரை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

parisAttackPics

ஐ. எஸ் ஐ. எஸ் அமைப்பை சேர்ந்த அப்டெல்ஹமிட் அபாயோட்டை தேடும் ஒரு முயற்சியாக பாரிஸின் சைண்ட் டெனிஸ் என்ற புறநகர் பகுதி ஒன்றின் குடியிருப்பு பகுதியை சுற்றிவளைத்து பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இன்று இந்த சம்பவம் இடம்பெற்றது.இந்த தாக்குதலில் பொலிசார் சுமார் 5000 ரவுண்டுகள் துப்பாக்கி குண்டுகளை பயன்படுதியுள்ளதாகவும், பயங்கரவாதிகள் இருந்த வெட்டின் மீது அவர்கள் கடும் தாக்குதலை நடத்தியதாகவும், இதனால் வீடு பெரும் சேதம் அடைந்து தற்போது விழும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

parisAttackPics2

இந்த சம்பவத்தில் பிரான்சின் பயங்கரவாத முறியடிப்பு பிரிவைச் சேர்ந்த 5 பொலிசார் இலேசாக காயம் அடைந்ததுடன், 7 வயதுடைய ஒரு தாக்குதல் நாய் பலியானது.வீடு ஒன்றில் வைத்து மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய இருவர் இடிபாடுகளுக்குள் மறைந்து இருந்தபோது கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தவரும் கைது செய்யப்பட்டார்.

Views:
263
Article Categories:
News · World

Comments are closed.