Breaking News
Home / News / புகழின் உச்சத்தைத் தொட்ட தமிழீழ புரட்சிப்பாடகர் சாந்தன் காலமானார்!

புகழின் உச்சத்தைத் தொட்ட தமிழீழ புரட்சிப்பாடகர் சாந்தன் காலமானார்!

இலங்கை தயாகத்தின் புரட்சி பாடகராக திகழ்ந்து வந்த எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புரட்சி பாடகர் S. J. சாந்தன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இருந்த போதிலும், மருத்துவமனையில், அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2.10 மணீயளவில் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மிகவும் சிறந்த பாடர்களில் ஒருவரான S.J சாந்தன் நாடக கலைஞராகவும் தனது பெயரை நிலைநாட்டியவர்.

1995, ஆம் ஆண்டு வரை இவர் தான் பிரபல நட்சத்திரமாக விளங்கியவர். முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இவரது பாடல்களிலே மிகவும் புகழைப் பெற்ற ’மருதமலை மாமணியே முருகையா’ இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.

அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.

அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

2179total visits,7visits today

About admin

Check Also

family-house-fired-by-apple-phone

ஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை

ஆப்பிள் நிறுவனம் தங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாததால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்துள்ளதாக அமெரிக்க தம்பதியினர் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ...

content protection plugin by http://jaspreetchahal.org