புகுஷிமா அணு உலை விபத்து: வெளியான புகைப்படங்கள்

fukisima

ஜப்பானின் புகுஷிமாவில் 2011 ல் நடந்த அணு உலை(Nuclear Power plant) விபத்து, ஏற்படுத்திய அழிவு எல்லோரும் அறிந்ததுதான்.

கடந்த 4 ஆண்டுகளில் அந்த விபத்திலிருந்து இயற்கை தன்னை மீட்டிருப்பதுதான் ஆச்சரியப்பட வைக்கிறது.

அணு உலை வெடித்துச் சிதறினால் அதன் அழிவு, அளித்துவந்த பயனைவிட பலமடங்கு இருக்கும். அதனாலேயே அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் கூட மின் உற்பத்திக்கு அணு உலையை நாடுவதில்லை.

ஜப்பான் தங்கள் வேலையின் செய்நேர்த்தி திறமையை நம்பி, அணு உலை அமைப்பதில் தீவிரம் காட்டியது. அதனால் மிகுந்த பயனை அடைந்தது அதுபோலவே விபத்துகளால் அழிவையும் சந்தித்தது.

புகுஷிமாவில் 2011 ல் ஏற்பட்ட நிலநடுக்கம் அதன் காரணமாக உருவான சுனாமி மற்றும் அணு உலை விபத்து, 1986 ல் செர்னோபியில் நடந்த அணு உலை விபத்துக்கு அடுத்து நடந்த பெரிய விபத்து போன்றவை, அங்கு வசித்தவர்களை தங்கள் வீட்டையும் பொருள்களையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என ஓடவைத்தது.

12.5 கி.மீ. தூரத்துக்கு சேதமடைந்த அணு உலையி ன் கதிர்வீச்சு தாக்கம் இருந்தது. அதனால் அந்த சுற்றளவுக்குள் இருக்கும் மக்கள் உடனடியாக இடம்பெயர வேண்டும் என்று அரசும் அறிவித்தது. கிட்டத்தட்ட 160,000 பேர் இருப்பிடம் விட்டு இடம்பெயர்ந்தனர்.

அணு உலைக்கு அருகில் இருந்த பகுதியில் விஷ கதிர்வீச்சின் அடர்த்தி அதிகமிருந்ததால், அங்குள்ள கணினி முதலான அனைத்துப்பொருள்களையும் காட்டுப்பகுதிக்கு அப்புறப்படுத்தினர்.

தரை மணல்கள் கூட சாக்குகளில் வாரப்பட்டு, ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் ஒதுக்கி வைக்கப்பட்டது.

வீடுகளை அப்படியே விட்டுவிட்டு போனதால் பராமரிக்காமல் கிடக்கிறது. தொழிற்சாலை வளாகத்திலும் குடியிருப்பு பகுதிகளிலும் பொது இடங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த பெருமளவிலான கார்கள் அழுக்கு படிந்து நிற்கிறது.

அதன்மீது புற்களும் புதர்செடிகளும் இப்போது மண்டி வளர்ந்திருக்கிறது, பள்ளிக்கூடங்களில் சம்பவத்தன்று போர்டில் எழுதியது இன்னும் அழிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது.

கதிர்வீச்சில் பாதித்த புற்களை தின்றதால் மாடுகளின் தோளில் வெண்ணிறத்தில் புதிரான வியாதியாக புள்ளிகள் தோன்றியுள்ளன.

இன்னும் அந்த நகரம் மக்கள் குடியேறாமல் ஆள் ஆரவாரமற்று காணப்படுகிறது.

ஒரு சிலர் அதன் அருகாமையில் வசிப்பவர்கள் இப்போது அங்கு நிலவும் சூழலை கொஞ்சம் அச்சத்தோடு சென்று பார்த்துவருகின்றனர். அந்த நிசப்தம் சினிமா காட்சி போல உள்ளதாக கூறுகின்றனர்.

இப்போது இந்த நகரின் பல புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

மனிதன் தவறுகளையும் இயற்கை சரி செய்துகொள்வது, மன்னிக்கும் செயலாகவே அமைகிறது.

fukisima_photos3

fukisima

fukisima

Views:
358
Article Categories:
News · World

Comments are closed.