மஹிந்தவுடன் தாய்லாந்தில் சந்திப்பு! உதயங்க வீரதுங்க விரைவில் கைதாகலாம்?

ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை மஹிந்த ராஜபக்ச தனது தாய்லாந்து விஜயத்தின் போது சந்தித்தமை தொடர்பில், அமைச்சரவைக் கூட்டத்தில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவின் தாய்லாந்து விஜயத்தின் போது உதயங்கவைச் சந்தித்தமை தொடர்பில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இவரது இணையத்தளம் மற்றும் முகநூல் பக்கம் என்பன தற்பொழுது செயற்பட்டு வருகின்றன.

இவர் தொடர்பில் பிரதமர் விரைவில் அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

உதயங்க வீரதுங்கவை மிக விரைவாக கைது செய்ய வேண்டியுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு அது தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Views:
232
Article Categories:
News · Sri Lanka

Comments are closed.