யார் இந்தப் பிரபாகரன்: பின்னணி என்ன?

Aranthangi Prabakaran

முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது, செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இவரின் பெற்றோர் இலங்கையின் மலையகத் தமிழர். பிரபாகரன் இளவயதிலேயே தமிழகம் வந்து உறவினர்களுடன் வசித்து வருகிறார். இதனால் தமிழகத்தில் நடைபெறும் ஈழத்தமிழர் குறித்த அரசியல் நிகழ்வுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் சென்னையில் கோயம்பேடு பகுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அவ்வப்போது சென்னையில் நடைபெறும் தமிழர் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்துள்ளார்.

Views:
210
Article Categories:
India · News

Comments are closed.