லேசர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Asus

Laser Phone Asus

Asus நிறுவனமானது Asus ZenFone 2 Laser எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடையதும் IPS தொழில்நுட்பத்தினை உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் 16GB சேமிப்புக் கொள்ளளவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி 199 டொலர்களாகவும், 32GB சேமிப்புக் கொள்ளளவினை உடைய கைப்பேசி 249 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

Views:
241
Article Categories:
Tech

Comments are closed.