லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘மாயா’ செய்த புதிய சாதனை!

Nayanthara

கடந்த 12 வருடங்களுக்கும் மேல் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது வெற்றியின் உச்சத்தில் இருக்கின்றார்.பிரபல முன்னணி நடிகர்களின் படங்களே ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் தியேட்டர்களை விட்டு வெளியேறும் நிலையில் தொடர்ந்து மூன்று சூப்பர் ஹிட் வெற்றிகளை கொடுத்து தான் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.நயன்தாரா நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் 100வது நாளை நோக்கி வெற்றிகரமாக பெரும்பாலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நடித்த மற்றொரு படமான ‘மாயா’ இன்று 50வது நாள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிய ‘மாயா’ திரைப்படம் டெக்னிகலாக நல்ல படம் என்றாலும் இந்த படத்தின் புரமோஷனுக்கு நயன்தாராவின் பெயர்தான் பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டது. இதுவொரு பேய்ப்படமாக மட்டுமின்றி தாய்மையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவும், அதற்கு நயன்தாராவின் நடிப்பு பெரும் உதவியாகவும் இருந்தது என்பதே பெரும்பாலான விமர்சனங்களின் கருத்து.நயன்தாராவின் ‘நானும் ஒரு ரெளடிதான்’ திரைப்படமும் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த படமும் விரைவில் 50வது நாளை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views:
246
Article Categories:
Cinema

Comments are closed.