Breaking News
Home / News (page 5)

News

கருணாவை எவ்வாறு கொழும்புக்கு கூட்டிச் சென்றேன்? – விளக்குகிறார் அலிசாஹிர் மௌலானா எம்.பி.

Ali Zaher Moulana

அன்று ஏப்ரல் 12ம் திகதி. மாலை 5 மணியளவில் தொப்பிகலவிற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து குறுக்கு வீதியூடாக எனது வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது. சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை சென்ற போது அங்கு கருணா அம்மானும் அவரது குழுவினரும் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். என்னுடைய வாகனத்தில் கருணா அம்மானையும் இன்னும் நான்கு பெண் தளபதிகளையும் ஏற்றிக்கொண்டேன். மற்றுமொரு வானில் முக்கிய தளபதிகள் சிலர் ஏறிக்கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கம் ...

Read More »

வைகோவின் தாயார் காலமானார்! – சீமான் இரங்கல்

Vaiko Mother Died

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் (வயது 96). இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வயோதிபம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இவரை பாளை ஐகிரவுண்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் அருகில் ...

Read More »

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாபெரும் போராட்டம்! – அமைச்சர் சத்தியலிங்கம் தகவல்

santhayalingam mp

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் நடந்த விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான மலசலகூடம் அமைப்பதற்கான காசோலை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுகாதார அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எந்தவித விசாரணைகளுமின்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை வரும் ...

Read More »

கோத்தபாய கைது செய்யப்படலாம் என்கிறார் ராஜித சேனாரத்ன!

அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம் பெற்றது. இதில் கருத்து வெளியிட்ட அவர், சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையினை வைத்து கோத்தபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மிதக்கும் ஆயுத ...

Read More »

ஜெயலலிதா பிரபலப்படுத்திய சூப்பர் ஹிட் பாடல்!

இன்றைக்கு தமிழகத்தில் முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும், மொபைல் ரிங்டோனிலும்  ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல், நம்ப தோழர்.கோவன் பாடிய ”ஊருக்கு ஊரு சாராயம்…” என்ற மதுவிலக்கு பாடல் தான். இந்த பாட்டை பாடியதற்கு தான் ஜெயலலிதாவிற்கு கோபம் வந்து, கோவனை பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த பாட்டை யாரும் விரும்பிக்கேட்டதாக தெரியவில்லை. தோழர்.கோவன் சார்ந்த கலைக்குழுவில் மட்டும் தமிழகத்தில் ஆங்காங்கே பாடப்பட்டு வந்தது. சினிமா மாதிரி அப்படி ஒன்றும் ”ஹிட் சாங்கும்” ...

Read More »

சுவிஸ் பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத் தமிழர் தெரிவு

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம். மாணவர்களின் கல்விச் செயற்பாடு புறக்கிருத்திய நடவடிக்கைகள் அனைத்துக்கும் மேலாக நற் பழக்க வழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தெரிவு இடம்பெற்று வருகின்றது. பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர்கள் கல்வித் திணைக்களத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். தெரிவுக் குழுப் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தெரியாமலேயே பாடசாலைகளுக்கு வருகை தந்து ...

Read More »

நடு வீதியில் ஓட ஓட மனைவியை விரட்டி சுட்டுக்கொன்ற பிரேசில் பொலிஸ் அதிகாரி!

பிரேசில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நடு வீதியில் ஓட ஓட விரட்டி 11 தடவைகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சீசீரீவி (CCTV )வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அதிர்சிகரமான சம்பவம் தென்கிழக்கு பிரேசிலின் உபேர்லான்டியா வீதியில் ஒக்டோபர் 20 ஆம் திகதி முற்பகல் 10. 50 அளவில் நடைபெற்றுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தின் சீசீரீவி வீடியோவே இப்போது பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. 46 வயதான பொலிஸ் அதிகாரிக்கும் ...

Read More »

அரசியல் கைதிகளை சனிக்கிழமைக்குள் விடுவிக்க வேண்டும்! – கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்கு முன்பாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 எம்.பிக்களும் கையொப்பமிட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இன்று அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக வருமாறு: அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, பல தடவைகள் தங்களின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இன்றுவரை அவர்களின் விடுதலை தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு ...

Read More »

ஏழு வருடங்களாக சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்

Little Girl raped in sri lanka

ஏழு வருடங்களாக பாலியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளான சிறுமி பொத்துவில் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது தெரியவந்துள்ளது. பொத்துவில் ரொட்டை பிரதேசத்தைச்சேர்ந்த இச்சிறுமி ஏழு வருடங்களுக்கு முன்னர் தனது 12 வயதிலே குடும்ப வறுமை காரணமாக தாய்தந்தையரின் அனுமதியுடன் வீட்டு வேலைக்கென ஒரு குடும்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டாள். பின்னர் எந்த தொடர்பும் இல்லாமல் ஏழுவருடங்களாக ஒரு தனி அறைக்குள் பூட்டப்பட்டு பாலியல் ரீதியான சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்ட விடயம் தற்போதுதான் ...

Read More »

புகுஷிமா அணு உலை விபத்து: வெளியான புகைப்படங்கள்

fukisima

ஜப்பானின் புகுஷிமாவில் 2011 ல் நடந்த அணு உலை(Nuclear Power plant) விபத்து, ஏற்படுத்திய அழிவு எல்லோரும் அறிந்ததுதான். கடந்த 4 ஆண்டுகளில் அந்த விபத்திலிருந்து இயற்கை தன்னை மீட்டிருப்பதுதான் ஆச்சரியப்பட வைக்கிறது. அணு உலை வெடித்துச் சிதறினால் அதன் அழிவு, அளித்துவந்த பயனைவிட பலமடங்கு இருக்கும். அதனாலேயே அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் கூட மின் உற்பத்திக்கு அணு உலையை நாடுவதில்லை. ஜப்பான் தங்கள் வேலையின் செய்நேர்த்தி திறமையை ...

Read More »

பிள்ளையான் மீதான விசாரணைகள் புலனாய்வு பிரிவினரால் திசை திருப்பப்படுகிறதா?

Pillaiyaan

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org